தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல்; வி.சி. மாவட்ட செயலாளர் கைது!

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல்; வி.சி. மாவட்ட செயலாளர் கைது!

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல்; வி.சி. மாவட்ட செயலாளர் கைது!


UPDATED : நவ 18, 2024 08:47 PM

ADDED : நவ 18, 2024 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2024 08:47 PM ADDED : நவ 18, 2024 08:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புகாரில் விடுதலை சிறுத்தைகள் கோவை தெற்கு மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் செயலாளராக இருப்பவர் அசோக் குமார். 2 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி வடக்கிபாளையம் கோவை சாலையில் கட்சியின் சார்பில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.

இதனால் அதிருப்தி அடைந்த விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஐ.பி.எஸ்., அதிகாரியான பொள்ளாச்சி கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங்கை தொலைபேசியில் அழைத்துள்ளார். பேனர் அகற்றப்பட்டது குறித்து பேசிய அவர், அதுதொடர்பாக தகாத வார்த்தைகளினால் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதை தொடர்ந்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம், பெண் அதிகாரி சிருஷ்டி சிங் புகார் அளித்தார்.

இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து, அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us