ADDED : நவ 10, 2025 01:11 AM
கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்று நோய் என, எட்டு வகையான புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பெண்களை பாதுகாக்க, முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்ள, தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், முழு உடல் பரிசோதனை வசதிகளுடன் கூடிய வாகனங்கள் அனுப்பப்படும்.
அந்த வாகனம், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 38 மாவட்டங்களுக்கும், தலா ஒரு வாகனம் வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.
இன்னும், 10 நாட்களில், முதல்வர் ஸ்டாலினால் வாகனம் துவக்கி வைக்கப்படும். அதேபோல, பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கு, கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-- மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்

