sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கண்ணை மூடினார் 'கன்னடத்து பைங்கிளி' : அமைதி ஆனார் 'அபிநய சரஸ்வதி'

/

கண்ணை மூடினார் 'கன்னடத்து பைங்கிளி' : அமைதி ஆனார் 'அபிநய சரஸ்வதி'

கண்ணை மூடினார் 'கன்னடத்து பைங்கிளி' : அமைதி ஆனார் 'அபிநய சரஸ்வதி'

கண்ணை மூடினார் 'கன்னடத்து பைங்கிளி' : அமைதி ஆனார் 'அபிநய சரஸ்வதி'

35


UPDATED : ஜூலை 15, 2025 08:08 AM

ADDED : ஜூலை 14, 2025 10:29 AM

Google News

UPDATED : ஜூலை 15, 2025 08:08 AM ADDED : ஜூலை 14, 2025 10:29 AM

35


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87 வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்சனையால் காலமானார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றார். மறைந்த சரோஜாதேவிக்கு திரையுலகினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் 1938ம் ஆண்டு ஜன.,7ல் பிறந்த இவர் தனது 17வது வயதில் ‛மகாகவி காளிதாஸ்' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகாகி புகழ்பெற்றார். தமிழில் ‛நாடோடி மன்னன்' என்ற படத்தில் எம்ஜிஆர் உடன் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


தேசிய விருதுக்கு பரிந்துரை


சரோஜா தேவி 1955 ஆம் ஆண்டு மகாகவி காளிதாஸ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறையில் நுழைந்தார், அவரது முதல் நடிப்பு படம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.





தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார்.


பாலும் பழமும்


கடைசியாக தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்தார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். எம்.ஜி.ஆருடன் 26 திரைப்படங்கள் மற்றும் சிவாஜியுடன் 22 திரைப்படங்கள் நடித்துள்ளார். பாலும் பழமும், பாசம், ஆலயமணி, கல்யாணியின் கணவன், தாய் சொல்லை தட்டாதே, தர்மம் தலைகாக்கும் என்ற திரைப்படங்கள் மிக பிரபலமானது.



இந்நிலையில் வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார்.

சரோஜாதேவிக்கு ஸ்ரீ ஹர்ஷா என்ற கணவர் இருந்தார். 1986லேயே அவர் மறைந்துவிட்டார். புவனேஷ்வரி, இந்திரா என இரு மகள்களும், கவுதம் ராமச்சந்திரன் என்ற மகனும் உள்ளனர்.


பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும், தமிழகம் உள்ளிட்ட பிறமாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார்.

சரோஜாதேவியின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோகத்திலும் ஒற்றுமை

சரோஜாதேவி நடித்த பல பாடல்களுக்கு ‛மெல்லிசை மன்னர்' எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். அவரின் நினைவு தினம் இன்று(ஜூலை 14). இந்த நாளிலேயே சரோஜாதேவியும் மறைந்தது திரை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல 2015ம் ஆண்டில் எம்எஸ்வி இறக்கும் போது அவரது வயது 87. இன்று மறைந்த சரோஜாதேவியின் வயது 87 என்பது குறிப்பிடத்தக்கது.



அரசு மரயாதையுடன் இறுதிச்சடங்கு


சரோஜாதேவி உடல் நாளை (ஜூலை 15) மதியம் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.



கண்கள் தானம்

சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இவரது கண்கள் இரு குழந்தைகளுக்கு தானமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் இறந்த பின்னரும் இரு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி சென்றிருக்கிறார் சரோஜா தேவி..



.






      Dinamalar
      Follow us