துணைவேந்தர் கைது பின்னணியில் பொன்முடி: அண்ணாமலை "பகீர்" குற்றச்சாட்டு
துணைவேந்தர் கைது பின்னணியில் பொன்முடி: அண்ணாமலை "பகீர்" குற்றச்சாட்டு
ADDED : ஜன 03, 2024 01:08 PM

சேலம்: ‛‛சேலம் பெரியார் பல்கலை., துணைவேந்தர் மீது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தூண்டுதலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி வருகையால் தமிழக பா.ஜ., வினர் இடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தியது தமிழக மக்களுடன் பிரதமர் மோடி இணைந்துள்ளதை காட்டுகிறது. 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்து மாநிலங்களுக்கு ரூ.120 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தலைகுனியக்கூடிய அளவில் சேலம் பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜெகநாதன் கைது சம்பவம் நடந்துள்ளது. துணைவேந்தரின் கைதில் போலீசார் செயல்பாடு சரியில்லை. ஜாதி கூறிய திட்டியதாக முகாந்திரமே இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து கொண்டு 4 மணி நேரம் போலீசார் வாகனத்தில் சுற்றியது ஏன்?.
துணைவேந்தர் ஜெகநாதன் கைது ,பொன்முடி சொல்லி கொடுத்து தான் நடந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலை., 5 ஆண்டுகளாக பதிவாளர் இல்லாமல் இயங்கி வந்தது.தற்போது துணைவேந்தர் மீது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தூண்டுதலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.