ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் மொத்தமாக ஆப்சென்ட்
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் மொத்தமாக ஆப்சென்ட்
UPDATED : ஏப் 25, 2025 04:58 PM
ADDED : ஏப் 25, 2025 11:13 AM

ஊட்டி: பல்கலை துணைவேந்தர்களின் மாநாடு, கவர்னர் ரவி தலைமையில் ஊட்டியில் தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில், 32 பல்கலைகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் கவர்னராக  ரவி பொறுப்பேற்ற பின், அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களின் மாநாட்டை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடத்தி வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்பட்ட நிலையில் நான்காவது ஆண்டாக இன்று (ஏப்ரல் 25) ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின்  துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை  துணை ஜனாதிபதி  ஜெகதீப் தன்கர்  தொடங்கி வைத்தார். மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழகத்தில் உள்ள  மாநில பல்கலை துணைவேந்தர்கள் 21 பேர், தனியார் பல்கலை துணைவேந்தர் 25 பேர், மத்திய பல்கலை துணைவேந்தர் மூவர் என 49 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், 32 பேர் பங்கேற்றனர். 17 பேர் பங்கேற்கவில்லை.
எனினும் தமிழக அரசு பல்கலைகளின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்காத பல்கலைகளின் பட்டியல்:
1. அண்ணா பல்கலை 2. அண்ணாமலை பல்கலை
3. பாரதியார் பல்கலை
4. பாரதிதாசன் பல்கலை
5. மதுரை காமராஜர் பல்கலை
6. மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகம்
7. அன்னை தெரேசா பல்கலை
8.  டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவர் பல்கலைக்கழகம்
9. டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்.
10.  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.
11. தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம்
12. தமிழ் பல்கலைக்கழகம்
13. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
14. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
15. தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகம்
16. தமிழ்நாடு உடற்கல்விகள் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்
17.  தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்

