
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை அருகே ஒன்னிபாளையம் கருப்பராயன் கோவிலில் வழிபாடு செய்ய, நேற்று கோவை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
கல்லுாரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத கொடூரம். அதுவும் நம் கொங்கு மண்ணில் நடந்திருக்கிறது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது.
குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தருவதும் காவல் துறையினரின் பொறுப்பு. நிச்சயமாக, காவல்துறை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவர் என நம்புகிறேன்.
இவ்வாறு துணை ஜனாதிபதி தெரிவித்தார்.

