ADDED : நவ 20, 2025 01:06 AM

கோவை: மேற்கு வங்கம், தமிழகம், கேரளாவில் தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெறும், என, தமிழக பா.ஜ., துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெறும்.
மேற்கு வங்கம், கேரளாவிலும் சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெல்லும். தமிழகத்தில், ஊழல், மணல் கடத்தல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, என பொதுமக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது.
தஞ்சாவூரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து, அவர்களின் பாதிப்பை கேட்டறிந்தேன். மாநில அரசு மீது அவர்கள் கோபம் கொண்டுள்ளனர்.
வரும் தேர்தலில் தே.ஜ., கூட்டணிக்கு இது சாதகமாக இருக்கும். பெண்களுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். நாட்டு முன்னேற்றத்துக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு கூறினார்.

