கூட்டணி இன்றி வெற்றி சாத்தியமில்லை; மார்க்சிஸ்ட் திட்டவட்டம்!
கூட்டணி இன்றி வெற்றி சாத்தியமில்லை; மார்க்சிஸ்ட் திட்டவட்டம்!
ADDED : நவ 24, 2024 12:31 PM

மதுரை: 'தி.மு.க., அ.தி.மு.க., போன்ற கட்சிகள் பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட, கூட்டணி இல்லாமல் அந்த கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
'கூட்டணி வைப்போம், ஆனால் ஆட்சியில் பங்கு கொடுக்க மாட்டோம் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்' என மதுரையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை, வித்தியாசமான சூழ்நிலை உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., போன்ற கட்சிகள் பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட, கூட்டணி இல்லாமல் அந்த கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது. எந்த தேர்தலிலும் தி.மு.க.,வோ அ.தி.மு.க.,வோ கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை.
ஆட்சியில் பங்கு
ஆனால் தேர்தல் வெற்றிக்கு கூட்டணியை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆட்சி அமைக்கும் போது, தனி ஆட்சி முறையை மேற்கொள்கிறார்கள். அது அப்படி தான் மேற்கொள்வார்கள். அதுல போய் நாங்கள் என்ன சொல்றது இருக்கு? புதிதாக வந்து இருக்கிற சில கட்சிகள், நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.
அவங்களோட யார் கூட்டணி சேர போகிறார்கள். அப்படி சேர்ந்தால் அவங்க என்ன வெற்றி பெற போகிறார்கள். வெற்றி பெற்று அவர்கள் ஆட்சியில் பங்கு தர போகிறார்களா? இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.