ADDED : பிப் 13, 2024 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சட்டசபையில் நேற்று கவர்னர் தன் உரையில், முதல் பக்கத்தை மட்டும் வாசித்தார். அதன்பின் சில கருத்துக்களை தெரிவித்து, நான்கு நிமிடங்களில் பேசி முடித்து அமர்ந்தார்.
கவர்னர் உரை நேரடி ஒளிபரப்பு என்பதால், அனைத்து சமூக வலைதளங்களிலும் கவர்னர் பேச்சு வெளியானது.
கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களிலும், 'கவர்னர் சட்டசபையில் ஆற்றிய உரை' என்ற தலைப்பில், அவர் பேசிய வீடியோ வெளியிடப்பட்டுஉள்ளது.