ADDED : செப் 20, 2011 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, திரை உலகைச் சேர்ந்தவர் என்பதால், அ.தி.மு.க.,வின் ஆசியுடன் தேர்தலில் போட்டியிடலாம் என ஆசைப்பட்ட நடிகர் விஜயின் ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம், அவர்களது அமைப்பு, அரசியல் கட்சி என்ற அங்கீகாரம் பெறாமல், 'மக்கள் இயக்கம்' என்ற இயக்கமாக இருப்பதால், எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள், அந்தந்த மாவட்டங்களில் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் துவங்கி உள்ளனர். தங்கள் தலைமையின் உத்தரவைப் பெற்று, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுவது, தலைமையின் வாழ்த்துக்களோடு, அ.தி.மு.க.,வின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது என்பது, இவர்களின் கணக்கு.