ADDED : ஏப் 04, 2025 09:16 PM

சென்னை:நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு வழங்கிய 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அமலுக்கு வந்ததுள்ளதாக, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமிஷனர் ராமர் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக, சமீபத்தில் மத்திய அரசு, அவருக்கு 'ஒய் பிரிவு' பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து அவருக்கு, சி.ஆர்.பி.எப்., படையின், வி.ஐ.பி., பாதுகாப்பு கமாண்டோ வீரர்கள் 8-11 பேர் சுழற்சி முறையில், அதிநவீன துப்பாக்கிய ஏந்தியபடி பாதுகாப்பு அளிப்பர்.
இந்த கமாண்டோ வீரர்கள், விஜய் தங்கும் மற்றும் பயணிக்கும் இடங்களில், 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பர். விஜய்க்கான 'ஒய்' பிரிவு பாதுகாப்பு நடைமுறை நேற்றில் இருந்து அமலுக்கு வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

