ADDED : நவ 11, 2025 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.ஐ.ஆர்., திருத்த பணியை பார்த்து, தி.மு.க., பயப்படுகிறது என பழனிசாமி கூறுகிறார். பா.ஜ.,வோடு கூட்டணி வைப்பதற்கு, தன் நிலையில் இருந்து பழனிசாமி கீழே இறங்கி இருப்பது பரிதாபத்திற்குரியது. வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி என்பதை, முன்பு பெயருக்கு வைத்திருந்தனர். இப்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அ.தி.மு.க., ஐந்து அணிகளாக பிரிந்து இருக்கிறது என கூறுகின்றனர். எம்.ஜி.ஆர்., பலத்தில் உருவானது அ.தி.மு.க., அவர் மறைந்த பின், அந்த பலம் அவர்கள் கைவிட்டுப் போனது. இதனால், அக்கட்சி மளமளவென சரிந்து கொண்டிருக்கிறது.
நடிகர் விஜய், பாதிக்கப்பட்ட மக்களை கரூர் சென்று சந்திக்கவில்லை; சென்னைக்கு அழைத்து பேசுகிறார். அவ்வளவு பெரிய மனிதரோடு நாங்கள் மோத மாட்டோம்.
-துரைமுருகன், தமிழக அமைச்சர், தி.மு.க.,

