ADDED : நவ 17, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜய் வெளியிட்ட பத்து நிமிட வீடியோவால், 'சர்வர் கிராஸ்' என சொல்லும் அளவிற்கு தேர்தல் கமிஷன் இணைய தளத்தை மக்கள் பார்த்துள்ளனர். எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிரான, த.வெ.க., போராட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, மறைமுகமாக பா.ஜ., அரசுக்கு நட்புறவாக தி.மு.க., அரசு செயல்படுகிறது. பீஹார் தேர்தல் முடிவு போன்ற நிலை, தமிழகத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காக, நுணுக்கமாக திட்டமிட்டு அடியெடுத்து வைக்கிறோம்.
அடுத்தடுத்த நாட்களில், விஜய் வரத்தான் போகிறார்; பேசத்தான் போகிறார். வெகு விரைவில், விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் மீண்டும் துவங்குவதற்கான ஏற்பாடு நடைபெறுகிறது. விஜய் பேசும் ஒவ்வொரு பேச்சிலும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் மிக முக்கியமான பல விஷயங்கள் வெளிப்படும் .
- ராஜ்மோகன், கொள்கை பரப்பு செயலர், த.வெ.க.,

