sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்': விஜயை வெளுக்கும் அ.தி.மு.க.,

/

'ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்': விஜயை வெளுக்கும் அ.தி.மு.க.,

'ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்': விஜயை வெளுக்கும் அ.தி.மு.க.,

'ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்': விஜயை வெளுக்கும் அ.தி.மு.க.,

15


UPDATED : பிப் 14, 2026 10:28 AM

ADDED : பிப் 14, 2026 03:50 AM

Google News

15

UPDATED : பிப் 14, 2026 10:28 AM ADDED : பிப் 14, 2026 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'மற்ற கட்சிகளில் இருந்து துாக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக் கொண்டு, கட்சி என்ற பெயரில், ஒரு 'வாட்ஸ் ஆப்' குழுவை, த.வெ.க., தலைவர் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார்' என, அ.தி.மு.க., கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக, அ.தி.மு.க., வெளியிட்ட பதிவு:


நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் அங்கிள்; அப்பாவால சினிமா நடிகராக வந்தீங்க. சினிமாவில் ரஜினி, விஜயகாந்தை காப்பியடித்தார் விஜய். அரசியலில், அடுத்த கட்சி வரலாற்று தலைவர்களின் பாரம்பரியத்தை திருடி, காப்பியடித்து, அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் விஜய் எப்படி ஒரிஜினல் ஆவார்.

'தி.மு.க., எதில் எல்லாம் 'அவுட் ஆப் கண்ட்ரோல்' என்பதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவுபடி, அ.தி.மு.க., ஐ.டி., விங் பதிவிட்டதை காப்பியடித்து, யாரோ எழுதிக் கொடுத்ததை, அடி மாறாமல் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய் ஒப்பித்துள்ளார்.

சொந்தமாக ஒரு வரிகூட பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றை பற்றி கேள்வி கேட்கலாமா. கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல், மற்ற கட்சிகளில் இருந்து துாக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு, கட்சி என்ற பெயரில் ஒரு 'வாட்ஸ் ஆப்' குழுவை நடத்திக் கொண்டிருக்கும் விஜய், 'அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்' என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.

விஜய்க்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை. அதனால் அ.தி.மு.க., தலைவர்களை, இரவல் பெற்று 'ஸ்டிக்கர்' ஒட்டிக்கொண்டு திரிகிறார். ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., பெயரில் சவாரி செய்வதை நிறுத்துங்கள் பார்ப்போம்.

ஜெயலலிதா ஆட்சி அமைய 'அணிலாய்' இருந்ததாக சொல்லிய விஜயை, மிகப் பெரிய துயரமான 41 பேர் இறந்தபோது பேசக்கூடாது என்று அரசியல் பண்போடு பழனிசாமி நடந்து கொண்டார்.

விஜய் சினிமா பட டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லையா; அப்படி பார்த்தால் விஜய்க்கு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே. கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க விஜய் அங்கிள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us