காங்கிரசில் சேர விரும்பி ராகுலை சந்தித்தார் விஜய்
காங்கிரசில் சேர விரும்பி ராகுலை சந்தித்தார் விஜய்
ADDED : நவ 19, 2025 09:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கிரஸ் கட்சியை போல, த.வெ.க.,வும் வாக்காளர் திருத்தப் பணியை எதிர்க்கிறது. அதற்காக, அக்கட்சி காங்கிரசோடு கூட்டணிக்கு வரும் என்ற அர்த்தம் இல்லை. கரூரில் த.வெ.க., கூட்டத்தில் நடந்த துயர சம்பவத்தால், விஜயுடன், ராகுல் பேசியதாக வெளியான தகவல்களால், கூட்டணிக்காக அச்சாரம் என சொல்லி விட முடியாது.
த.வெ.க., தலைவர் விஜய், எங்களுக்கு புதியவர் இல்லை. கடந்த, 2010ல், காங்.,- எம்.பி., ராகுலை சந்தித்து கட்சியில் சேருவது குறித்து விஜய் பேசினார். ஆனால் காங்.,கில் இணையவில்லை. வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதே கணித்து சொல்ல முடியாது.
- ஜோதிமணி, காங்., - எம்.பி.,

