ADDED : அக் 22, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், புதுச்சேரி செயலாளர் சரவணன் திடீரென உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், புதுச்சேரி செயலாளராக இருந்தவர் சித்தன்குடியை சேர்ந்த சரவணன், 47; இவர், நேற்று மாலை 6.45 மணியளவில் வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில், தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்க இருந்த நிலையில், மாநாட்டு பணியில் சரவணன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், திடீரென அவர் இறந்ததால், புதுச்சேரி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.