ADDED : டிச 16, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடிகர் விஜய் இதுவரை ஒரு கவுன்சிலர் தேர்தலை கூட சந்தித்தது இல்லை. ஆனால், பா.ஜ., 20 மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சி. அப்படி இருக்கும்போது, புதிதாக துவங்கப்பட்டுள்ள விஜயின் த.வெ.க., கட்சியையும், பா.ஜ.,வையும் ஒப்பிடுவது சரியல்ல.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15 -- 18 சதவீத ஓட்டுகள் இருப்பதாக பேசி வருகின்றனர். இந்த சதவீத ஓட்டுகளை வைத்து, விஜயால் தி.மு.க., வெற்றிக்கு மறைமுகமாக உதவ முடியுமே தவிர, வீழ்த்த முடியாது. எனவே, தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்றால், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் த.வெ.க., இணைய வேண்டும்.
இல்லாவிட்டால், வரும் தேர்தலோடு விஜய் காணாமல் போவார். கமலுக்கு ஏற்பட்ட நிலை தான் விஜய்க்கும் ஏற்படும். அடுத்து வரும் லோக்சபா தேர்தலில், விஜய்க்கு தி.மு.க., நிச்சயமாக ஒரு எம்.பி., சீட்டை கொடுக்கும்.
-வேலுார் இப்ராஹிம், தேசிய செயலர், பா.ஜ., சிறுபான்மையினர் அணி

