sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணம்; ஒரு நாளுக்கு விஜய் ரூ.40 லட்சம் செலவு

/

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணம்; ஒரு நாளுக்கு விஜய் ரூ.40 லட்சம் செலவு

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணம்; ஒரு நாளுக்கு விஜய் ரூ.40 லட்சம் செலவு

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணம்; ஒரு நாளுக்கு விஜய் ரூ.40 லட்சம் செலவு

36


UPDATED : ஜன 14, 2026 02:29 AM

ADDED : ஜன 14, 2026 02:27 AM

Google News

UPDATED : ஜன 14, 2026 02:29 AM ADDED : ஜன 14, 2026 02:27 AM

36


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.வெ.க., தலைவர் விஜய், சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் டில்லி சென்று வர, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க., தலைவர் விஜய், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பிரசாரத்திற்கு சென்றாலும், காரில் செல்வதில்லை. சென்னை விமான நிலையத்தில் இருந்து, தனி விமானத்தை வாடகை எடுத்து, பிரசாரம் அல்லது கூட்டம் நடக்கும் மாவட்டங்களுக்கு செல்கிறார். பொதுவாக விமான சேவை, பயணியர் விமானம், தனி விமானம் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

உணவருந்தும் அறை

பயணிகள் செல்லும் விமானத்திற்கு, துாரத்திற்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் போன்றோர், பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக, தனி விமானத்தில் பயணம் செய்ய விரும்புகின்றனர். இதற்கென சில விமான நிறுவனங்கள், பிரத்யேக சேவைகளை வழங்கி வருகின்றன.

நடிகர் விஜய் கட்சி துவக்கிய பின், அடிக்கடி தனி விமானத்தில் பயணம் செய்து வருகிறார். கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் இறந்த சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. விசாரணையில் ஆஜராக, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் டில்லி சென்றார். நேற்று காலை அதே விமானத்தில் திரும்பினார்.

அந்த விமானம், 'இ.எம்.பி- 135 பி.ஜே லெகஸி 600' வகையை சேர்ந்தது. இது, 13 பேர் வரை பயணம் செய்யும், சிறிய ரக சொகுசு விமானம். இதன் உட் புறத்தில், உணவருந்தும் அறை , ஓய்வறை என, பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. சமைக்கவும் வசதி உள்ளது.

பேசு பொருள்

இந்தியாவில் இந்த வகை விமானத்திற்கு ஒரு நாள் வாடகை, குறைந்த பட்சம், 10 லட்சம் ரூபாய் வசூலிக்கப் படுகிறது. சென்னையில் இருந்து டில்லி வரை, ஒரு வழி பயணத்திற்கு எரி பொருள், ஊழியர்கள் சம்பளம், சிவில் அமைச்சகம் நிர்ணயித்த வரிகள் என அனைத்தும் சேர்த்து, 20 லட்சம் வரை செலவாகும்.

சென்னை விமான நிலையத்தில், தனியார் விமானங்கள் தரை யிறங்க, பார்க்கிங் செய்ய, தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் இரண்டு மணி நேரத்திற்கு, 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை; அதன்பின் விமானத்தின் எடைக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி நடிகர் விஜய், சமீபத்தில் டில்லிக்கு தனி விமானத்தில், விசாரணைக்காக சென்று திரும்பியதற்கு, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கலாம் என, விமான போக்கு வரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சி.பி.ஐ., விசாரணைக்கு, விஜய் தனி விமானத்தில் சென்றது, தற்போது பேசு பொருளாகி உள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us