sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீமான் பாதை வேறு; எங்கள் பாதை வேறு: அண்ணாமலை திட்டவட்டம்!

/

சீமான் பாதை வேறு; எங்கள் பாதை வேறு: அண்ணாமலை திட்டவட்டம்!

சீமான் பாதை வேறு; எங்கள் பாதை வேறு: அண்ணாமலை திட்டவட்டம்!

சீமான் பாதை வேறு; எங்கள் பாதை வேறு: அண்ணாமலை திட்டவட்டம்!

20


UPDATED : டிச 01, 2024 02:59 PM

ADDED : டிச 01, 2024 02:57 PM

Google News

UPDATED : டிச 01, 2024 02:59 PM ADDED : டிச 01, 2024 02:57 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'திராவிட கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் விஜய் பேசுகிறார். புதிதாக வேறு ஏதும் இல்லை' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



3 மாதங்களுக்கு பிறகு, லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார் அண்ணாமலை. அவருக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெளியே போய் படிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. கடந்த 3 மாதங்களாக பா..ஜ., உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பாக நடந்தது. கடுமையாக உழைத்த பா.ஜ.,வினர் மற்றும் எச்.ராஜாவுக்கு நன்றி.

உலகம் முழுவதும் அரசியல் சூழல் எப்படி மாறி கொண்டு இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து படித்தேன். ஆக்ஸ்போர்ட்டு பல்கலை., மிக பழமையானது. 3 மாதம் எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அனுமதி கொடுத்த கட்சிக்கு நன்றி.

3 மாதம் தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு பெரிய நடிகர், தனது உச்சத்தில் இருக்க கூடிய இடத்தில் இருந்து, அரசியலில் கால் பதிக்க வேண்டும் என விஜய் வந்து இருக்கிறார். அவரை வரவேற்கின்றோம். காரணம், அவர் வந்து இருக்கும் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். வரும் காலத்தில் இது குறித்து பதில் சொல்வோம். மாநாட்டில் அவர் வைத்துள்ள கருத்துக்கள் குறித்து பா.ஜ., வினர் பதில் சொல்லி இருக்கிறார்கள்.

குடும்ப கட்சி

உதயநிதி துணை முதல்வர் ஆக பொறுப்பு ஏற்று இருக்கிறார். இது ஒரு வேகமான வளர்ச்சி. பா.ஜ., எப்போதும் வைக்க கூடிய குற்றச்சாட்டு. தி.மு.க., ஒரு குடும்பத்தை சார்ந்து இருக்கும் கட்சியாக இருக்கிறது. குடும்ப கட்சி உண்மை என்று சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் உதயநிதியை செயல்பாடு குறித்து நிச்சயம் விமர்சிப்போம். நன்றாக செயல்பட்டால் பாராட்டுவோம். அகில இந்திய அளவில், ஹரியானாவில் பா.ஜ., வெற்றி பெற்று இருக்கிறது. மஹா.,வில் சரித்திர வெற்றி பெற்று இருக்கிறது. எல்லா மாநிலத்திலும் பா.ஜ., முதன்மையான கட்சியாக இருக்கிறது.

3 மாதங்களில் கோடிக்கணக்கானோர் பா.ஜ.,வில் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். இந்தியாவில் ஜனநாயக கட்சியாக இருக்க கூடிய ஒரே கட்சி பா.ஜ.,. கிளை தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை தொண்டர்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். திராவிட கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் விஜய் பேசுகிறார். புதிதாக வேறு ஏதும் இல்லை.

சீமானின் பாதை வேறு, எங்களுடைய பாதை வேறு. எங்கள் பாதத்தை நாங்கள் வலுவாக பதித்து இருக்கிறோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. விஜய் பேச்சு, அவரது கொள்கை திராவிட கட்சிகளுடன் ஒத்து போகிறது. இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை எல்லோரும் கணித்துள்ளார்கள். புதிதாக வர போகிறவர்களை பார்த்து பா.ஜ., எப்போதும் பயப்பட போவது கிடையாது. பெண்கள் முதல் வயதானவர்கள் வரை மனதில் விஜய் இடம் பிடித்து இருக்கிறார். அதனை மறுக்க முடியாது.

புதிய களம்

இந்திய அளவில் அதிக வசூல் பெறக்கூடிய நடிகராக விஜய் இருக்கிறார். ஆனால் அரசியல் களம் வேறு. அக்.,28ம் தேதிக்கு பிறகு எத்தனை முறை விஜய் வெளியே வந்து இருக்கிறார். எங்களுக்கு யார் மீதும் பயமில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு 3 ஆக ஓட்டுக்கள் பிரிந்து இருக்கிறது.

பா.ஜ.,வின் ஓட்டு தேசிய அளவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. புதியவர்களை தடுக்க கூடாது. விஜயை கேள்வி கேட்கும் இடத்தில் கேள்வி கேட்போம். தி.மு.க., ஆம்ஆத்மி வித்தியாசமான முறையில் பயணிக்கிறது. 2026ம் ஆண்டு புதிய களமாக இருக்கும். பொறுத்து இருந்து பார்ப்போம். பா.ஜ., உறுப்பினர்கள் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us