உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 09, 2026 07:01 AM

அ நிறம் | அளவு
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும், 'திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற விட மாட்டோம்' என, அத்தொகுதி எம்.எல்.ஏ.,வும், த.வெ.க., அமைச்சருமான நிர்மல்குமார் முஷ்டியை மடக்குகிறார். 'தீபத்துாணை இருளிலேயே வைத்திருப்பது தான் எங்கள் அரசின் நிலைப்பாடு' என, மற்றொரு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முட்டுக்கொடுக்கிறார்.
முருக பக்தர்களுக்கு எதிராக, த.வெ.க.,வின் வாலும், காலும் இப்படி சலங்கை கட்டி ஆட, 'தலைமை' என கூறிக்கொள்ளும் முதல்வர் விஜய், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல் அமைச்சர்கள் இப்படி வாய் வார்த்தைகளால் விளையாடுவதை வேடிக்கை பார்க்கவா, மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தனர்?
தேர்தலுக்கு முன் அமைதி காத்துவிட்டு, ஆட்சி அமைத்ததும், முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராக போர்க்கொடி பிடிப்பது தான் த.வெ.க.,வின் மதநல்லிணக்க அரசியலா? சிறுபான்மையினர் ஓட்டுகளை கவர, ஹிந்துக்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்யலாம் என்ற தி.மு.க.,வின் அதே கீழ்த்தரமான எண்ணத்தை, அப்படியே பிரதிபலிக்கும் நீங்கள் துாய சக்தி அல்ல; துரோக சக்தி.
- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,
