விஜயலட்சுமி அடுத்த வீடியோ; இதுக்கு ஒரு முடிவே இல்லையா!
விஜயலட்சுமி அடுத்த வீடியோ; இதுக்கு ஒரு முடிவே இல்லையா!
UPDATED : நவ 12, 2024 03:20 PM
ADDED : நவ 12, 2024 11:14 AM

சென்னை: 'உங்க முதல்வர் கனவை விட்டு விடுங்க மிஸ்டர் சீமான்' என்று கூறி, நடிகை விஜயலட்சுமி இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இருக்கும் தகராறு, எல்லோரும் அறிந்தது தான். அவ்வப்போது சீமானை திட்டி வீடியோ வெளியிடுவதும், பிறகு அமைதியாகி விடுவதும் விஜயலட்சுமிக்கு வாடிக்கை. லோக்சபா தேர்தல் நேரத்தில் விஜயலட்சுமி, சென்னையில் வந்திறங்கி போலீசில் சீமான் மீது புகார் கொடுத்து, பேட்டியும் கொடுத்தார். அவரது பின்னணியில் தி.மு.க., இருப்பதாக, அப்போது சீமான் குற்றம் சாட்டினார்.
சில மாதங்களாக அமைதியாக இருந்த விஜயலட்சுமி, இப்போது விஜய் - சீமான் இடையிலான உரசல் பின்னணியில் மீண்டும் வீடியோ வெளியிட தொடங்கியுள்ளார். நேற்று வெளியிட்ட இரண்டாம் வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது: வந்தாச்சு மீண்டும் மிஸ்டர் சீமான். ரொம்ப உத்தமர் மாதிரி தமிழ் தேசியத்தை பற்றி இவ்வளவு கதை பேசிவிட்டு, 'நான் ரொம்ப நல்ல தமிழ் அப்பா, அம்மாவுக்கு பிறந்து இருக்கிறேன்' என்று சொல்லியாச்சு.
அப்போ நான் என்ன ஹிந்தி அப்பா, அம்மாவுக்காக பிறந்து இருக்கிறேன்? நானும் தமிழ் அப்பா, அம்மாவுக்கு தான் பிறந்து இருக்கிறேன். ஒண்ணும் இல்லை சீமான். நெக்ஸ்ட் முதல்வர் ஆக்குங்க என்று சொன்னீங்களே?
ரூ.50 ஆயிரம்
தமிழக மக்களுக்கு ஒரே விஷயத்திற்கு தெளிவு கொடுங்கள். அதன் பிறகு உங்களை முதல்வர் ஆக்கலாமா? வேண்டாமா? என அவங்க முடிவு செய்வார்கள். போன வருடம், மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை, நீங்கள் எனது வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரிய கூடாது. நாம் தமிழர் கட்சிக்கு தெரிய கூடாது. மீடியாவுக்கு தெரிய கூடாது. தமிழகத்தில் யாருக்குமே தெரிய கூடாது என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, அதன் பிறகு இரவும்,பகலுமாக என்னிடம் வீடியோ வாங்கிட்டு, டார்ச்சர் செய்தீங்களே, அது எல்லாம் தாங்க முடியாமல் தான் நான் வழக்கு போட்டேன்.
அதனை அப்படியே மறைத்து விட்டு, தி.மு.க., இவங்கள கூட்டிட்டு வந்து இருக்காங்க, எனது பெயரை நாசம் செய்வதற்கு என்று ஒரு பச்சை பொய் சொன்னீங்களே? அவ்வளவு தான், உங்களுடைய யோக்யதை மிஸ்டர் சீமான். ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் உங்களிடம் வீட்டு வேலைக்கு வந்து சேர்ந்த மதுரை செல்வம், எனக்கு ரூ. ஒரு கோடி குடுத்து இருக்கிறாரா?
அது எல்லாம் என்ன என்று சொல்வதற்கு உங்களுக்கு யோக்யதை இருக்கிறதா? ஏதோ வாபஸ் கொடுத்துவிட்டு போய்விட்டா என்று நினைத்து, உங்க மனைவி முன் நின்று, 'பழக்கத்திற்கு இவள் தான் கிடைத்தாளா என எனது மனைவி கேட்டாள்' என்று கெக்கே பிக்கென்னு சிரித்தீர்களே, இது தான் உங்களுடைய யோக்யதை.
இது எல்லாம் பார்த்த பிறகு, உங்களை முதல்வர் ஆக்க போறாங்களா? ஒன்றும் இல்லை மிஸ்டர் சீமான், உங்களுக்கு முதலில் உண்மை பேசும் யோக்யதையே கிடையாது. உங்கள மாதிரி துரோகிகள் கையில் எல்லாம், தமிழகம் என்னைக்கும் சிக்காது. சிக்கிறதுக்கு தமிழ் உணர்வாளர்கள் யாரும் விடவும் மாட்டார்கள். ஓகேவா, உங்களது முதல்வர் கனவை எல்லாம் இப்பொழுதே விட்டுவிடுங்கள். என்னுடைய கண்ணீர் விட, எங்க அக்காவோட கண்ணீர் என்னைக்கும் உங்களை வந்து சும்மாவிடாது. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

