தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விஜய் படத்துக்கு தொடரும் சிக்கல்; தணிக்கைச்சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து

விஜய் படத்துக்கு தொடரும் சிக்கல்; தணிக்கைச்சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து

விஜய் படத்துக்கு தொடரும் சிக்கல்; தணிக்கைச்சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து


UPDATED : ஜன 28, 2026 05:48 PM

ADDED : ஜன 27, 2026 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2026 05:48 PM ADDED : ஜன 27, 2026 10:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச்சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.

அரசியலில் களம் பதித்திருக்கும் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். இந்த படம், பொங்கல் முன்னிட்டு ஜன.,9ல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் போர்டு தணிக்கைச்சான்று வழங்கவில்லை. மத உணர்வுகளை புண் படுத்தும் வகையிலும், இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்துக்கள் இடம் பெற்று இருப்பதாக கூறி, போர்டு உறுப்பினர் புகார் அளித்ததால், சான்று வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. படத்தை 9 பேர் கொண்ட மறு ஆய்வுக்குழுவுக்கு சென்சார் போர்டு தலைவர் அனுப்பி வைத்தார்.

இதை ஏற்காத பட தயாரிப்பு நிறுவனம், தணிக்கைச்சான்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. விசாரித்த தனி நீதிபதி ஆஷா, தணிக்கைச்சான்று வழங்கவும், மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ரிட் அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் வழக்கை விசாரித்தது. இரு தரப்பினரும், தங்கள் வாதங்களை முன் வைத்தனர். இதையடுத்து நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தும், சென்சார் போர்டு மேல் முறையீட்டை ஏற்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

சென்சார் போர்டு பதில் மனு தாக்கல் செய்வதற்கு தனி நீதிபதி அவகாசம் அளித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மீண்டும் தனி நீதிபதி வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். படத்தின் தயாரிப்பாளர், தன் முறையீட்டு விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்வதற்கும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us