ADDED : நவ 22, 2025 10:53 AM

சென்னை: தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு, நாளை (நவ.,23) ஞாயிறு காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் ஜேப்பியார் கல்லுாரியில் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (நவ.,23) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கட்சியினரும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

