sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெரம்பூரில் விஜய் போட்டி?

/

பெரம்பூரில் விஜய் போட்டி?

பெரம்பூரில் விஜய் போட்டி?

பெரம்பூரில் விஜய் போட்டி?


ADDED : பிப் 22, 2026 05:56 PM

Google News

ADDED : பிப் 22, 2026 05:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை வியாசர்பாடியில் (இன்று பிப்ரவரி 22) பெரம்பூர் சட்டசபை தொகுதிக்கான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்தார். சட்டசபை தேர்தலில் வட சென்னையில் விஜய் களமிறங்க இருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகியது.

கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: எங்கு வறுமை, ஏழ்மை அதிகம் உள்ளதோ எங்கு வளர்ச்சி இல்லையோ, எங்கு குடிசை பகுதிகள் அதிகம் உள்ளதோ, பெண்கள் பாதுகாப்பு குறைவாக உள்ளதோ அங்குதான் நிற்பேன் என கூறினார் விஜய்.

பல ஆண்டுகளாக வட சென்னை திமுக கோட்டையாக உள்ளது. வட சென்னை என்றாலே வேறு பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அமைதியாக பிரசாரம் செய்த நமது நிர்வாகிகள் மீது கை வைத்ததால்தான் தலைவர் முதலில் வட சென்னையில் களமிறங்குகிறார். 4 மாத கர்ப்பிணியான எங்கள் தங்கை வயிற்றில் எப்போது கை வைத்தார்களோ அப்போதே தலைவர் பெரம்பூரில் இருந்து தொடங்குங்கள் என்று கூறினார்.

சென்னை விருகம்பாக்கம் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வடசென்னையை குறி வைக்கும் நோக்கில் பெரம்பலூரில் களமிறங்க இருப்பது தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us