விஜய் கொள்கை வேறு; எனது கொள்கை வேறு: சொல்கிறார் சீமான்
விஜய் கொள்கை வேறு; எனது கொள்கை வேறு: சொல்கிறார் சீமான்
UPDATED : அக் 27, 2024 09:50 PM
ADDED : அக் 27, 2024 09:47 PM

சென்னை: '' திராவிடமும், தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னால், அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: விஜய் என்னை விமர்சனம் செய்கிறார் என ஏன் எடுத்து கொள்ள வேண்டும். அவரின் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்து போகவில்லை.
நான் கூறுவது என் நீண்ட கால இன வரலாறு. இங்கு உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு என்ன என்பது. திராவிட கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். தமிழ் நேயர்கள்.
கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன். வரலாறு, காலம் எனக்கு இந்த பணியை கொடுத்தது. காரணம் என் இனத்தின் மரணம். எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன். அதை செய்கிறேன்.
திராவிடமும், தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் சொன்னால், அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று கிடையாது. அது வேறு. இது வேறு. இது எனது நாடு. எனது தேசம். இங்கு வாழும் மக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல்.
என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சி என பெயர் வைத்த போது யாரும் எதிர்த்து பேசவில்லை. நாங்கள் தமிழ் தேசம்பெயர் வைத்த போது பாசிசம், பிரிவினைவாதம் என சொல்கிறீர்கள். இது ஏற்புடையது அல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.