தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பா.ம.க.,விடம் விஜய் தரப்பு பேச்சு: முதல்வர் பதவியால் குழப்பம்

பா.ம.க.,விடம் விஜய் தரப்பு பேச்சு: முதல்வர் பதவியால் குழப்பம்

பா.ம.க.,விடம் விஜய் தரப்பு பேச்சு: முதல்வர் பதவியால் குழப்பம்


UPDATED : ஏப் 19, 2025 08:02 AM

ADDED : ஏப் 19, 2025 02:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 19, 2025 08:02 AM ADDED : ஏப் 19, 2025 02:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு, 90 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, கூட்டணி அமைக்க, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உடன் த.வெ.க., தரப்பில் பேச்சு நடத்தியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, பா.ம.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் நடந்த தேர்தல்களில், வட மாவட்டங்களில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுடன், பா.ம.க., கூட்டணி வைத்து, வெற்றியை சுவைத்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், பா.ம.க., சந்தித்த அனைத்து தேர்தலிலும், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. வெற்றி எட்டாக்கனியானது.

வியூகம் அமைப்பு


'வரும் 2026 சட்டசபை தேர்தலில், வெற்றிக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்' என, ராமதாஸ் கருதுகிறார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி போட்டியிட்டும், இரண்டாம் இடத்தை பா.ம.க., உறுதி செய்தது.

வட மாவட்டங்களில் உள்ள, 20 லோக்சபா தொகுதிகள், 120 சட்டசபை தொகுதிகளில், பா.ம.க.,வை பலப்படுத்தி வெற்றி பெற்றால், முதல்வர் பதவி அன்புமணிக்கே கிடைக்கும். அந்த அடிப்படையில், தேர்தல் கூட்டணியை அமைக்க, தனக்கு நெருக்கமான நண்பர்களை, தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து, ராமதாஸ் வியூகம் அமைத்து வருகிறார்.

இதற்கிடையில், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா அன்புமணி தலைமையில் நடக்க இருக்கிறது. மாநாட்டில், 10 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்; மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து, கூட்டணி பேச, தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., கட்சிகள் போட்டிபோட்டு வர வேண்டும் என, ராமதாஸ் விரும்புகிறார்.

த.வெ.க., தலைவர் விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவர், சமீபத்தில் ராமதாசை சந்தித்துப் பேசினார். சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வுக்கு 90 தொகுதிகள், மீதமுள்ள 144 தொகுதிகளில், த.வெ.க., மற்றும் சில கட்சிகள், கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என, ஆடிட்டர் தெரிவித்துள்ளார். அதற்கு ராமதாஸ், 'சினிமாவில் விஜய் உச்ச நட்சத்திரம் என்பதும், அவர் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதும் தெரியும். அரசியலில் அவரது வெற்றியை இன்னும் பார்க்கவில்லை.

விமர்சிக்கவில்லை


விஜய் கட்சி துவக்கியதும், அன்புமணி வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் விஜயை, இதுவரை விமர்சிக்கவே இல்லை. வன்னியர் சமுதாய இளைஞர்களும், விஜய் ரசிகர்களாக உள்ளனர். அவர்கள் எல்லாம், முதல்வர் வேட்பாளராக அன்புமணியை விரும்புவர்.

எனவே, இரண்டரை ஆண்டுகள் விஜய், அடுத்த இரண்டரை ஆண்டுகள் அன்புமணி முதல்வராக இருக்க, ஒப்பந்தம் போடுவதற்கு விஜய் தயாரா எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ஆடிட்டர் தரப்பில், 'துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவியை அன்புமணிக்கு வழங்கலாம். முதல்வர் பதவியை பங்கு போடுவது குறித்து, விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்' என, பதில் அளித்துள்ளார்.

சந்தேகங்கள் அனைத்துக்கும் தெளிவான பதில் பெற்று வாருங்கள். கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கலாம் என, விஜய் தரப்பு ஆடிட்டரிடம் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன

- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us