தமிழக அரசை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 05, 2024 07:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்திய டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனில்லை.
இதற்கு கட்டமைப்பு வசதி இல்லை. இந்தத் திட்டத்தால் குழப்பம் ஏற்படும். இந்தத் திட்டத்தை வலுக்கட்டாயமாக செய்யும் படி வலியுறுத்தும் தமிழக அரசை கண்டிக்கிறோம் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்னூர் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.