ADDED : மார் 18, 2025 05:39 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே நான்கு வழிச்சாலையில் பயணிகள் நிழற்குடை கட்டித்தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலை அமைத்தபோது, பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தில் இருந்த இரண்டு பயணியர் நிழற்குடைகள் இடித்து அகற்றப்பட்டது. அதன் பிறகு மீண்டும் பயணியர் நிழற்குடை கட்டி தரவில்லை.
இதனை கண்டித்தும், இந்நிலையில், பயணியர் நிழற்குடை கட்டித்தர வேண்டும், பெரியகுமட்டி பஸ் நிறுத்தத்தில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று காலை பெரியகுமட்டி பஸ் நிறுத்தம் அருகே திரண்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார், நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.