sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை : ஜவ்வாக இழுக்கும் நான்காம் கட்ட பணிகள் நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

/

 விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை : ஜவ்வாக இழுக்கும் நான்காம் கட்ட பணிகள் நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

 விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை : ஜவ்வாக இழுக்கும் நான்காம் கட்ட பணிகள் நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

 விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை : ஜவ்வாக இழுக்கும் நான்காம் கட்ட பணிகள் நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

3


ADDED : மார் 12, 2026 03:41 AM

Google News

ADDED : மார் 12, 2026 03:41 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், காரைமேடு - நாகப்பட்டினம் இடையிலான பணிகளை விரைந்து முடித்து, வரும் 2027ம் ஆண்டிலாவது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு, நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 179. 8 கி.மீ., துாரத்திற்கு 134 கிராமங்கள் வழியாக நான்கு வழிச்சாலை (NH -332A) அமைப்பதற்கு ரூ. 6,431 கோடியை மத்திய அரசு ஒதுக்கி, கடந்த 2021ம் ஆண்டு பணிகள் துவங்கியது.

விழுப்புரம் ஜானகிபுரத்தில் இருந்து எம்.என்.குப்பம் (0 - 29 கி.மீ.,) வரை முதல் கட்டமாகவும், எம்.என்.குப்பத்தில் இருந்து பூண்டியாங்குப்பம் வரை (29 - 67 கி.மீ.,) 38 கி.மீ., துாரத்துக்கு இரண்டாம் கட்டமாகவும், பூண்டியாங்குப்பத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா, சட்டநாதபுரம் காரைமேடு வரை (67-123.8 கி.மீ.,) 56.8 கி.மீ துாரத்துக்கு மூன்றாம் கட்டமாகவும், காரைமேட்டிலிருந்து நாகப்பட்டினம் வரை (123.8-179.8 கி.மீ.,) 56.0 கி.மீ., துாரத்துக்கு நான்காம் கட்டமாகவும் பணிகள் பிரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது.

முதல் மற்றும் இரண்டாம் கட்டமான 67 கி.மீ., துாரத்துக்கான பணிகளை, போபால் திலீப் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனமும், மூன்றாம் கட்டமான 56.8 கி.மீ., துாரத்துக்கான பணிகளை டில்லி ஓரியண்டல் ஸ்டிரக் ஷர் நிறுவனத்தினரும் விரைந்து முடித்தனர். இதையடுத்து, 123.8 கி.மீ., கொண்ட நான்கு வழிச்சாலையை, கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

கெங்கராம்பாளையம், சேலியமேடு, கொத்தட்டை ஆகிய இடங்களில் டோல்பிளாசா அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நான்காம் கட்ட சாலையை டெண்டர் எடுத்த குஜராத்தை சேர்ந்த வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 2021ம் ஆண்டில் பணிகளை துவக்கியது. இந்நிறுவனம் பணியை துவக்கிய காலத்தில் இருந்து, பெரிய சவால்களை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. நிலம் கையகப்படுத்துவதில் சட்ட சிக்கல்கள், சாலை அமைக்க தேவையான மண் கிடைக்காதது, பெஞ்சல் புயல் போன்ற காரணங்களால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

பெரிய பணிகளான திருக்கடையூர், காளியப்பநல்லுார் ஆகிய இரு இடங்களில் தலா ஒரு மேம்பாலமும், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் தலா 2 மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு இணைப்பு பணிகள் நடந்து வருகிறது.

அல்லிவிளாகம் பகுதியில் மேம்பால பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. ஆக்கூர் பகுதியில் டோல்பிளாசா அமைப்பதற்கு பணிகள் விரைந்து நடக்கிறது. உப்பனாறு, நந்தலாறு, வெட்டாறு உட்பட 7 இடங்களில் ஆற்றின் மீது பெரிய பாலங்களும், சிறிய வாய்க்கால்கள் மீது 29 இடங்களில் சிறிய பாலங்களும், மழை நீர் வடிந்து செல்வதற்கு 221 இடங்களில் கல்வெர்ட் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

ஒழுகைமங்கலம் கிராமத்தில் உப்பனாற்றில் ரயில்வே மேம்பாலம் பவுசிங் கர்டருடன் அமைத்து, பாலத்தில் தடுப்பு சுவர் பொருத்தும் பணிகள் நடக்கிறது. திருநள்ளார் பச்சூர் பகுதியில் ரயில்வே மேம்பால பவுசிங் கர்டர் அமைக்கப்படாமலும், இருபுறமும் மேம்பால இணைப்பு சாலைகள் போடப்படாமலும் கிடப்பில் உள்ளது.

திருநள்ளார் பைபாஸ் பணி 6 கி.மீ., துாரத்திற்கு முடிவடைந்துள்ளது. காரைக்கால் பைபாஸ் பணி 14 கி.மீ., நாகப்பட்டினம் பைபாஸ் பணி 15 கி.மீ., என மொத்தம் 29 கி.மீ., துார பைபாஸ் பணிகளில் 70 சதவீதமே முடிவடைந்துள்ளது. நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில் தெத்தி என்ற கிராமத்தில் மேம்பால தடுப்புச் சுவர் அமைக்கும்போது உடைந்து விழுந்து மண் சிதறியது. இந்த இடத்தில் மீண்டும் மண் கொட்டி தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.

பெரும்பாலான இடங்களில் சிமென்ட் சாலை பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. முதல் மூன்றுகட்ட சாலைகளைவிட, நான்காம்கட்ட சாலை மிக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் பயணிக்கும்போது அதிர்வு இன்றி பயணிக்க முடிகிறது.

தற்போதைய நிலவரப்படி, காரைமேடு - நாகப்பட்டினம் இடையிலான மொத்தப் பணிகளில் 65 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது.

மீதமுள்ள 35 சதவீத பணிகளை நகாய் அதிகாரிகள் கண்காணித்து, விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்.

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகளை முழுமையாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டிலாவது (2027) அர்ப்பணிப்பதற்கு நகாய் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்துகளை தடுக்க

என்ன செய்ய வேண்டும்?

கண்டமங்கலம் பஸ் நிலையம் அருகே, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். பங்கூரில், புதுச்சேரிக்கு பிரியும் சாலை குறித்த அறிவிப்பு பலகையை, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் எளிதாக பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் முன்கூட்டியே அமைக்க வேண்டும். தற்போது, சாலை பிரியும் இடத்தை கடந்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எம்.என்.குப்பம் முதல் பூண்டியாங்குப்பம் வரையிலும், கொத்தட்டை டோல்கேட்டில் இருந்து சட்டநாதபுரம் வரையிலும், எதிரே வருகின்ற வாகனங்களின் முகப்பு ஒளி வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு கூசாத வகையிலும், சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் சென்டர் மீடியன்களில் பூஞ்செடிகளை நட்டு வளர்க்க வேண்டும். எம்.என்.குப்பம் முதல் பூண்டியாங்குப்பம் வரை சாலையில் வாகனங்கள் செல்லும்போது ஆங்காங்கே மேடு பள்ளத்தில் விழுந்து செல்கிறது. இந்த பகுதிகளை கண்டறிந்து சீரமைப்பு பணிகளை திலீபன் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தினர் செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us