sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சமூக நீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள்: கவர்னர் ரவி வேதனை

/

சமூக நீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள்: கவர்னர் ரவி வேதனை

சமூக நீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள்: கவர்னர் ரவி வேதனை

சமூக நீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள்: கவர்னர் ரவி வேதனை

25


UPDATED : ஜன 13, 2025 02:50 PM

ADDED : ஜன 13, 2025 02:45 PM

Google News

UPDATED : ஜன 13, 2025 02:50 PM ADDED : ஜன 13, 2025 02:45 PM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சட்டசபையில், 6ம் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ரவி, தேசிய கீதம் பாட வலியுறுத்தினார். சபையில், அ.தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள், அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக, கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

தேசிய கீதம் பாடப்படாத நிலையில், சபையில் இருந்து கவர்னர் வெளியேறினார். 'கவர்னரின் செயல் சிறுபிள்ளைத்தனம்' என, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். 'இத்தகைய ஆணவம் நல்லதல்ல' என, முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் நேற்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று (ஜன.,13) ஓசூரில் நடந்த வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. 60 ஆண்டுகளாக இரவும், பகலும் சமூக நீதி பேசும் தமிழகத்தில் தொடர்ந்து தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள்.

சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன. இன்றளவும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும். வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது. சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர். ஆனால் வள்ளலார் மீட்டார். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.






      Dinamalar
      Follow us