தி.மு.க., ஆட்சியை அகற்றுவோம்: விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்
தி.மு.க., ஆட்சியை அகற்றுவோம்: விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்
ADDED : ஜன 26, 2026 12:02 AM

சென்னை: 'ஹிந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக, தேர்தல் அறிக்கை வெளியிடும் அரசியல் கட்சிகளுக்கு, ஹிந்துக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்' என, விஸ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.
கூட்டத்தில், திருப்பரங்குன்றம் பாரம்பரிய தீபத்துாணில், தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாத அரசு மற்றும் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தீபத் துாணில் தீபம் ஏற்றுவதற்காக, தன் இன்னுயிரை தியாகம் செய்த பூர்ணச்சந்திரன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கிறிஸ்துவ ஓட்டு வங்கிக்காக, மதச்சார்பு வழிபாட்டு கட்டடங்களுக்கு, கலெக்டரின் தடையில்லா சான்று வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை திரும்ப பெற வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில், ஹிந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, தேர்தல் அறிக்கை வெளியிடும் அரசியல் கட்சிகளுக்கு, ஹிந்துக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இதை, வெகுஜன இயக்கமாக மக்கள் மத்தியில் எடுத்து சென்று, தி.மு.க., ஆட்சியை அகற்ற பணியாற்ற வேண்டும். பசு வதை தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
