ADDED : செப் 08, 2011 05:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சி.எம்.எஸ்., கல்வியியல் கல்லூரி சார்பில், வ.உ.
சிதம்பரனார் பிறந்த நாள் விழா, மத்திய சிறை வளாகத்திலுள்ள அவரது நினைவு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் நினைவு மண்டபத்திற்கு அணி வகுத்தனர். அங்கு வ.உ.சி.,யின் படத்திற்கு மலர் தூவி வழிபட்டனர். மேயர் வெங்கடாசலம், கப்பலோட்டிய தமிழனின் சுதந்திர போராட்டம் குறித்து விளக்கி, அனைவருக்கும் அவரை பற்றிய புத்தகம் வழங்கினார். இவ்விழா முன்னிட்டு நடந்த திறன் வளர்க்கும் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

