ADDED : டிச 10, 2025 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை:
வரும் 2026ம் ஆண்டில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்ப மனு படிவத்தை, இன்று முதல் வரும் 15ம் தேதி வரை, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
நேரடியாக வந்து விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள், இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும் 15ம் தேதிக்குள், சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

