தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தன்னார்வலர் மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்: ஐகோர்ட்

தன்னார்வலர் மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்: ஐகோர்ட்

தன்னார்வலர் மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்: ஐகோர்ட்


UPDATED : நவ 16, 2026 07:51 PM

ADDED : நவ 16, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 07:51 PM ADDED : நவ 16, 2026 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னார்வலர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, இக்கரை போளுவாம்பட்டியில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், தென்காசியை சேர்ந்த கணேசன் என்பவர், 2007ம் ஆண்டு முதல் தன்னார்வலர்களாக சேவை செய்து வந்தார். கடந்த 2023, பிப்ரவரியில், திடீரென காணாமல் போயுள்ளார்.

இதுதொடர்பாக, யோகா மையம் அளித்த புகார் அடிப்படையில், ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாததால், கணேசனை கண்டுபிடித்து தரக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கணேசனின் சகோதரர் திருமலை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கணேசன் காணாமல் போன விவகாரத்தை விரைந்து விசாரித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, ஆலந்துறை போலீசாருக்கு, 2024 ஜூனில் உத்தரவிட்டது. இருப்பினும் எந்த இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும் என, திருமலை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று விசாரித்தார்.

அப்போது, ‘‘புலன் விசாரணையை முடிக்கவோ, இறுதி அறிக்கை தாக்கல் செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,’’ என, அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், 12 வாரங்களில் விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us