உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 17, 2026 09:06 PM

அ நிறம் | அளவு
சேலம்: இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம், சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 தொகுதிகளிலும் நேற்று நடந்தது. ஆனால், யாரும் வராததால் பெரும்பாலான ஓட்டுச்சாவடி மையங்கள் வெறிச்சோடின.
காலை முதல் மாலை வரை, அலுவலர்கள் காத்திருந்த நிலையில், ஒன்றிரண்டு விண்ணப்பம் மட்டும் பெறும் நிலை இருந்தது.
இதுகுறித்து, தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், ‘தேர்தல் நெருங்கும்போதுதான், அரசியல் கட்சியினர் முன்னெடுத்து, உறுப்பினர் சேர்க்கைக்கு அழைத்து வருவர். தற்போது தேர்தல் இல்லாததால் எந்த கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை.
போதிய விளம்பரமும் இல்லை. இளம் வாக்காளர்கள், மொபைல்போனில் பதிவு செய்து கொள்வதால், முகாமுக்கு வருவதில்லை’ என்றார்.
