வாக்காளர் பெயர் சேர்ப்பு இன்று, நாளை சிறப்பு முகாம்
வாக்காளர் பெயர் சேர்ப்பு இன்று, நாளை சிறப்பு முகாம்
ADDED : டிச 27, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வசதியாக, இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை, 6.41 கோடியில் இருந்து, 5.43 கோடியாக குறைந்துள்ளது.
இறந்தவர்கள் உட்பட, 97 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தகுதியான வாக்காளர்களையும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, புதிய விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 1.83 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மாநிலம் முழுதும் உள்ள, 75,000 ஓட்டுச்சாவடிகளில் இன்றும், நாளையும், வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கத்திற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

