ராமநாதபுரத்தில் கனமழையால் சுவர் இடிந்தது; 5 வயது சிறுமி உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் கனமழையால் சுவர் இடிந்தது; 5 வயது சிறுமி உயிரிழப்பு
ADDED : டிச 13, 2024 12:55 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பரமக்குடி அருகே, சுவர் இடிந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ், ஜெயலட்சுமி தம்பதி. இவர்களது 5 வயது மகள் வீட்டின் வெளியே நடந்த சென்றார். தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்தது.
இதில் பால்ராஜ் மகள் கீர்த்திகா தலையில் விழந்தது. இதில் சிறுமி உயிரிழந்தார். ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகே தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதில் பலத்த காயமுற்ற மூதாட்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.