ADDED : அக் 30, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தேடப்பட்ட குற்றவாளி கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டார்.
வடகிழக்கு டில்லி நியூ உஸ்மான்பூரில் நேற்று முன் தினம் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத பைக்கை நிறுத்துமாறு சைகை செய்தனர்.
ஆனால், அந்த பைக்கை ஓட்டி வந்தவர் நிறுத்தாமல் சென்றார். போலீசார் விரட்டிச் சென்றபோது, துப்பாக்கியால் போலீசை நோக்கி சரமாரியாக சுட்டார்.
போலீஸ் கொடுத்த பதிலடியில், இடது காலில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார்.
சுற்றி வளைத்த போலீசார் அவரைக் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
பல குற்ற வழக்குகளில் தேடப்படும் காலா என்ற இம்ரான்,21, என்பது அடையாளம் காணப்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

