sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரஜினியை துாண்டியது அமித் ஷாவா... உதயநிதியா?: அடக்கிய விஜயால் அமைதியான ஆதவ் அர்ஜுனா

/

ரஜினியை துாண்டியது அமித் ஷாவா... உதயநிதியா?: அடக்கிய விஜயால் அமைதியான ஆதவ் அர்ஜுனா

ரஜினியை துாண்டியது அமித் ஷாவா... உதயநிதியா?: அடக்கிய விஜயால் அமைதியான ஆதவ் அர்ஜுனா

ரஜினியை துாண்டியது அமித் ஷாவா... உதயநிதியா?: அடக்கிய விஜயால் அமைதியான ஆதவ் அர்ஜுனா

19


UPDATED : மார் 18, 2026 05:48 AM

ADDED : மார் 18, 2026 01:22 AM

Google News

19

UPDATED : மார் 18, 2026 05:48 AM ADDED : மார் 18, 2026 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

நடிகர் ரஜினி பிரச்னை தொடர்பாக விளக்கம் கொடுக்க இருந்த ஆதவ் அர்ஜுனாவை, விஜய் தடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க., அரசை கண்டித்து, கடந்த 12ம் தேதி தமிழகம் முழுதும் த.வெ.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ், 'எம்.ஜி.ஆருக்கு பின், சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என வந்த நடிகர் ரஜினியை, அரசியலுக்கு வரவிடாமல் தி.மு.க., மிரட்டியது. இப்போது, ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் படம் நடிக்க போய் விட்டார். அரசியலுக்கு வரும் மன தைரியம் விஜய்க்கு மட்டும்தான் உள்ளது' என பேசி இருந்தார்.

இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஆதவ் அர்ஜுனாவை கண்டித்ததோடு, நடிகர் விஜய், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆதவை கண்டித்து, ரஜினியும் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், 'காலம் பேசாது. ஆனால், காத்திருந்து பதில் சொல்லும்' என அதில் சொல்லி இருந்தார். அதையடுத்து, இப்பிரச்னைக்கு விளக்கம் அளிக்க, ஆதவ் அர்ஜுனா விரும்பினார்.

சென்னை, பனையூரில் உள்ள த.வெ.க., அலுவலகத்தில் நேற்று மதியம் 1:30 மணிக்கு, செய்தியாளர்களை அவர் சந்திக்க இருந்தார். கடைசி நேரத்தில், அது ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து, த.வெ.க., வட்டாரம் கூறியதாவது: ஏற்கனவே, ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே, சமூக வலைதளங்களில் கடுமையான மோதல் நடக்கிறது. அதில் எண்ணெய் ஊற்றுவதுபோல், ஆதவ் பேசியதை, முதலில் விஜய் ரசித்தார். ஆனால், அரசியல் பிரச்னையாக மாறியதால், அதற்கு விளக்கம் கொடுக்க, ஆதவ் முன்வந்தார்.

'விளக்கம் கொடுக்கிறேன் என, எதையாவது பேசி, பிரச்னையை பெரிதாக்கி விடாதீர்கள். பிரஸ் மீட் வேண்டாம்' என, விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி கூறியதை ஆதவ் கேட்கவில்லை. இத்தகவல் விஜய்க்கு சொல்லப்பட, அவரின் எச்சரிக்கையின்படி, ஆதவ் பிரஸ் மீட் ரத்தாகி உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

இதற்கிடையில், ரஜினியின் திடீர் அறிக்கைக்குப் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக ஒரு தரப்பும்; 'துணை முதல்வர் உதயநிதி துாண்டுதல் பேரிலேயே விஜயை ரஜினி சீண்டி இருக்கிறார்' என்று மற்றொரு தரப்பும், மாறி மாறி கருத்துகளை வைக்க, சமூக வலைதளங்களில் சூடாகச் சென்று கொண்டிருக்கிறது விவாதம்.

முதல்வர் பதவி கொடுத்தாலும் கூட்டணி கிடையாது


''முதல்வர் பதவியே கொடுத்தாலும் யாருடனும் கூட்டணி இல்லை,'' என, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
பெரம்பூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் பயந்த ஒரே தலைவர் விஜய். அவர் மீதான பயத்தில் தான், முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அனுப்பி வைத்தார்.
'அடித்து விட்டு வா' என்றுதான் சொல்லி அனுப்பினர். ஆனால், கொன்று விட்டனர். அந்த பழியை த.வெ.க., மீது திணித்தனர். தற்போது, அவர்கள் மீதே சி.பி.ஐ., விசாரணை திரும்பியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், இனி எங்கு வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம். த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணத்தை வைத்து தேர்வாவதில்லை.
ரஜினி எப்போதும் நம் அன்புக்குரியவர். அவரது மன்றத்தில் இருந்து வந்தவரை, நாம் மேடை அளித்து, பொறுப்பும் வழங்கி இருக்கிறோம். 234 தொகுதியிலும் த.வெ.க., தனித்துதான் போட்டியிடும். முதல்வர், துணை முதல்வர், 50 'சீட்' என பல்வேறு வகைகளிலும் பேரம் பேசினர். ஆனால், விஜய் அதை மறுத்து விட்டார்.
ஜனநாயகன் படம் வெளியாகாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் அரசியல் தான். கீழ்தரமான பிரசாரத்தை முன்வைத்து, ரஜினியை அரசியலுக்கு வர விடாமல் செய்தது தி.மு.க., தான். அதைத்தான் சொன்னேன். அ.தி.மு.க.,வும் ரஜினிக்கு எதிராக பிரசாரம் செய்தது. ரஜினி கட்சி ஆரம்பிக்க முயன்றபோது, அதை கடுமையாக எதிர்த்தவர் பழனிசாமி.
என் பேச்சால் ரஜினிக்கு வருத்தம் என்றால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். முதல்வர் பதவியே தந்தாலும் யாருடனும் த.வெ.க., கூட்டணி சேராது. இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us