மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையா? எனக்கு தெரியாது என்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையா? எனக்கு தெரியாது என்கிறார் அமைச்சர் துரைமுருகன்
ADDED : ஜன 03, 2025 11:06 AM

சென்னை: மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ' சோதனை குறித்து எதுவும் தனக்கு தெரியாது' என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெறும் நிலையில் சென்னையில் வக்கீல்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'உங்களுக்கு எவ்வளவு தெரியுமா? அதுமட்டும் தான் எனக்கு தெரியும். எனக்கு யார் வந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
யாரும் வீட்டில் இல்லை. இரண்டு வேலை காரங்க மட்டும் தான் இருக்கிறார்கள். சோதனை நடத்த வந்திருப்பது எந்த டிபார்ட்மென்ட் அதிகாரிகள் என்று தெரியவில்லை' என காரில் இருந்த படியே துரைமுருகன் பதில் அளித்து விட்டு சென்று விட்டார்.