உள்ளடக்கத்திற்கு செல்ல

'பிளாஸ்ட்' என எதிர்பார்த்த மக்களுக்கு 'வேஸ்ட்' பட்ஜெட்
'பிளாஸ்ட்' என எதிர்பார்த்த மக்களுக்கு 'வேஸ்ட்' பட்ஜெட்
ADDED : ஆக 06, 2026 06:23 AM

அ நிறம் | அளவு
சட்டசபையில் வாசிக்கப்பட்ட, பட்ஜெட் குறித்து, 'ரீல்ஸ்' முதல்வருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'பிளாஸ்ட்' ஆக இருக்கும் என, எதிர்பார்த்த மக்களுக்கு, 'வேஸ்ட்' என, சொல்லும்படிதான் இருக்கிறது. இது தி.மு.க., அரசு திட்டங்களின் 'ரீமேக் வெர்ஷன்' பட்ஜெட்.
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்னை, மின் கட்டண குளறுபடி என, எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்கு தேவையான, புதிய தொலைநோக்கு திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட். அதுமட்டுமல்ல, 2,500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை,- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட். சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, -சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்டாகத்தான், 'ரீல் அரசின்' முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
- ஸ்டாலின், தலைவர், தி.மு.க.,
