தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கன அடியாக சரிவு


UPDATED : அக் 24, 2026 04:07 AM

ADDED : அக் 24, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 04:07 AM ADDED : அக் 24, 2026 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 3,000 கன அடியாக சரிந்தது

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்வதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 3,000 கன அடியாக சரிந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த அளவே கொட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us