ADDED : நவ 28, 2026 07:45 PM
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து இன்று (நவ.,28) மாலை வினாடிக்கு, 3,000 கன அடியாக சரிந்தது.
காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த வாரம், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 நாட்களுக்கு வினாடிக்கு, 2,000 கன அடி தமிழகத்திற்கு திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று (நவ.,27) அதிகரித்தது. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 3,000 கன அடியாக சரிந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் மெயின் அருவி, மெயின்பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் குறைந்தளவே கொட்டியது.
