தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,361 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,361 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,361 கனஅடியாக அதிகரிப்பு


ADDED : நவ 25, 2026 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 10:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: நீர் பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து, 3,361 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை நீர் பிடிப்பு பகுதியான, நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (நவ.,25) காலை, 346 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று இரவு வினாடிக்கு, 3,361 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 79.08 அடி, நீர் இருப்பு, 15.2 டி.எம்.சி., யாக இருந்தது. அணையிலிருந்து காளிங்கராயன் பாசனத்திற்கு, 300 கனஅடி மற்றும் கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி என மொத்தம், 305 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us