தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு


ADDED : நவ 26, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 07:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து இன்று (நவ.,26) மாலை வினாடிக்கு, 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் சொற்ப தண்ணீர் மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று (நவ.,25) மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 800 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை, 8:00 மணிக்கு, 4,000 கனஅடியாகவும், அது மாலை, 5:00 மணிக்கு, 5,000 கனஅடியாகவும் அதிகரித்து வந்தது.

இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் மெயின் அருவி, மெயின்பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us