மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!
மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!
ADDED : ஜூன் 12, 2025 10:14 AM

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக இன்று (ஜூன் 12) முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். 8 மதகுகள் வழியாக தண்ணீர் ஆர்பரித்து செல்கின்றனர்.
92வது ஆண்டாக பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மாலை 12 ஆயரம் கன அடியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம், 12 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படும். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முன்னதாக மேட்டூர் அணையில், மதகுகள் சீரமைப்பு பணி, நெடுஞ்சாலை சார்பில் சாலையோரத்தில் வளர்ந்திருந்த புல்கள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.