"ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்"- சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
"ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்"- சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : பிப் 22, 2024 02:57 PM
ADDED : பிப் 22, 2024 01:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்' என முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி சட்டசபையில் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். பா.ம.க., கோரிக்கைக்கு சாதகமாகவே தி.மு.க., அரசும் குரல் கொடுக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
வெளிநடப்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.