sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை சபதம்

/

தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை சபதம்

தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை சபதம்

தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை சபதம்

417


UPDATED : டிச 29, 2024 07:41 AM

ADDED : டிச 27, 2024 10:19 AM

Google News

UPDATED : டிச 29, 2024 07:41 AM ADDED : டிச 27, 2024 10:19 AM

417


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'இனி எல்லா மேடைகளிலும் தி.மு.க.,வை தோலுரித்துக் காட்டப்போகிறோம்,'' என்று, கோவையில் சாட்டையடி போராட்டம் நடத்திய பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று காலை 10 மணிக்கு கோவை நேரு நகரில், தனது வீட்டுக்கு முன் நின்று, அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் ஆறு முறை, அடித்து கொண்டார். அப்போது பா.ஜ., தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பா.ஜ.,வினர் வெற்றி வேல், வீர வேல்' என கோஷம் எழுப்பினர்.



பின்னர் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்து நம்முடைய அன்பை எல்லாம் பெற்ற மன்மோகன் சிங் இன்று நம்முடன் இல்லை. அவருக்கு பா.ஜ., சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வரும் நாட்களில் எப்போதும், அவர் நமது நாட்டிற்கு வகுத்து கொடுத்துள்ள பொருளாதார நினைவு கொள்கையை நினைவு கூர்வோம். ஒரு தனி மனிதனுக்கு ஆட்சியாளர்கள் மீது இருக்க கூடிய கோபத்தை காட்டக் கூடிய போராட்டம் அல்ல.

கண் முன்னால் அடுத்த தலைமுறை அழித்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வர ஆரம்பித்து இருக்கிறது. போராக இருந்தாலும் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது மண்ணின் மரபு. வரும் காலங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்த போகிறோம். ஆனால் இன்னைக்கு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடுக்க கூடிய குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாட்களுக்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

எதற்காக ஆறு சாட்டை அடி? காரணம் இருக்கிறது. முருகப்பெருமானிடம் எங்களுடைய வேண்டுதலை ஆறு சாட்டை அடியாக சமர்ப்பிக்கிறோம். விரதம் இருக்கப் போகிறோம். அரசியல் பணியை செய்ய போகிறோம். ஆண்டவனிடம் முறையிட போகிறோம். எல்லா மேடைகளில் தி.மு.க., வை தோலுரித்து காட்ட போகிறோம். 3 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னாடி கொண்டு சென்று உள்ளனர்.

கடுமையாக உழையுங்கள்

நல்ல யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கிறோம். காலணியை நேற்று கழற்றி வைத்து விட்டேன். தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் காலணியை அணிய போவதில்லை. தமிழக மக்களுக்காக செய்கின்றேன். கட்சி தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். கடுமையாக உழையுங்கள். மாற்றத்தை கொடுப்போம்.

மன்மோகன் சிங் மறைவு காரணமாக, பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிப்போம். நம்முடைய மண்ணில் உடலை வறுத்தி ஒரு விஷயத்தை முறையிடும் போது, அதற்கான பலன் இருக்கிறது. உடலை வறுத்தி வேண்டுதல் நடத்துவது நமது மண்ணில் ஒரு நிகழ்வு தான்.

தமிழ் மரபு

காவல்துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்தி அடைந்ததாக எப்படி கூற முடியும்? போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காக்கி உடையின் மீது தான் என் கோபம். சாட்டையில் அடிப்பது தமிழ் மரபு தான். சாட்டை அடியை ஆண்டவனிடம் சமர்ப்பித்துள்ளேன். எல்லா தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள். அறவழியில் போராடுங்கள்.

நம்பிக்கை

ஆண்டவனோடு உங்களை சமர்ப்பியுங்கள். நல்ல வழி கிடைக்கும். அதற்காக தொடர்ந்து களத்தில் இருங்கள். வெற்றி, தோல்வியை தாண்டி சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றி, தோல்வி என்பது இரண்டாவது. மக்கள் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளேன். பொறுப்பு வரும் போகும். இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவுக்கு அண்ணாமலை பதிலடி!

லண்டன் சென்று வந்த பின் அண்ணாமலைக்கு ஏதோ ஆகிவிட்டது என திருமாவளவன் கூறியதற்கு, 'லண்டன் சென்று வந்த பின் எனது அரசியல் தெளிவான பாதையில் செல்கிறது. தனக்கு புரிதல் கிடைத்து இருக்கிறது. லண்டன் சென்றுவந்த பின் இன்னும் நல்லவனாகி விட்டேன் என நினைக்கிறேன்' என அண்ணாமலை பதில் அளித்தார்.



அமைதியாக இருங்க...!

கோவையில் சாட்டையடி போராட்டம் நடத்திய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, வீட்டின் முன் கூடி இருந்த தொண்டர்களை அமைதிப்படுத்தினார். அப்போது தொண்டர்கள் அண்ணாமலையை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.








      Dinamalar
      Follow us