தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'தி.மு.க.,வே இருக்காது என்று சொன்னவர்களை காணவில்லை'

'தி.மு.க.,வே இருக்காது என்று சொன்னவர்களை காணவில்லை'

'தி.மு.க.,வே இருக்காது என்று சொன்னவர்களை காணவில்லை'


ADDED : பிப் 29, 2024 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : ''தமிழகத்தில் தி.மு.க.,வே இனி இருக்காது என கூறிய பலரை, இப்போது காணவில்லை,'' என, தி.மு.க., - எம்.பி. கனிமொழி கூறினார்.

அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு, தமிழகத்திற்காக புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு, மத்திய அரசின் திட்டங்கள் போல் 'ஸ்டிக்கர்' ஒட்டுகின்றனர். சமீபத்திய வெள்ள பாதிப்புக்கு, மத்திய அரசு இதுவரை எந்த நிவாரணமும் தரவில்லை.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் என்ற பெயரில், மக்களுக்கு வழங்கப்படும் நிதியில் 25 சதவீதம் மட்டுமே, மத்திய அரசு வழங்குகிறது; 75 சதவீத நிதியை மாநில அரசு தான் கொடுக்கிறது.

ஆனால், அந்தத் திட்டத்திற்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் என்று, 'ஸ்டிக்கர்' ஒட்டிக் கொண்டு, எங்களை பார்த்து ஸ்டிக்கர் ஒட்டுவதாக விமர்சிக்கின்றனர்.

முழு முயற்சி


'தி.மு.க., என்ற ஒரு கட்சியே தமிழகத்தில் இருக்காது' என்று கூறிய பலரை, இப்போது காணவில்லை. ஆனால், தி.மு.க., தமிழகத்தில் தொடர்ந்து பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டத்திற்காக, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதி, தொடர்ந்து கடிதங்கள் எழுதி கோரிக்கை விடுத்து வந்தார். நானும் லோக்சபாவில் பலமுறை இதை வலியுறுத்தி பேசி இருக்கிறேன்.

அதுமட்டுமின்றி, இந்த ஏவுதளம் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்திக் கொடுத்தது, தமிழக அரசு தான். தற்போதைய பட்ஜெட்டில், அங்கு விண்வெளி சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் அமைய, 2,000 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு ஒதுக்கி உள்ளது.

எனவே, இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு முழு முயற்சியுடன் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அறிவியல் பூர்வமாக ராக்கெட் ஏவுதளத்திற்கு, குலசேகரப்பட்டினம் தான் சரியான இடம் என, விஞ்ஞானிகளும் அறிவித்துஉள்ளனர்.

இது தொடர்பான விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலுவும், எம்.பி., என்ற முறையில் நானும் பங்கேற்றோம். ஆனால், எங்கள் பெயரைக் கூட சொல்வதற்கு, பிரதமருக்கு மனம் இல்லை.

ஆனாலும், இந்த திட்டத்தில் தமிழக அரசுக்கும் உரிமை உள்ளது. எங்கள் பெயர்களை போடாததும், பெயர்களை கூறாததும் தான், அவர்களுக்குத் தெரிந்த நாகரிகம்; அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை.

கோவிலை எதிர்த்து அல்ல


பா.ஜ., எதிர்பார்ப்பது போல், அவர்களுக்கு இங்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. அயோத்தியில் கோவில் கட்டியதில், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அந்த கோவிலை ஒரு டிரஸ்ட் அமைப்பு கட்டுகிறது. அதை எப்படி பா.ஜ., அரசின் சாதனையாக எடுத்துக்கொள்ள முடியும்?

அயோத்தி கோவில் கட்டியதை, பா.ஜ. அரசின் சாதனை என்று கூறுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். பார்லிமென்டில் நாங்கள் வெளிநடப்பு செய்தது, அயோத்தி கோவிலை எதிர்த்து அல்ல. பா.ஜ.,வினர் அதை வைத்து பேசும் சில பேச்சுகளை எதிர்த்துதான். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us