ஆன்மிகத்தில் மூழ்கிய தத்துவஞானி நமது பிரதமர்: ராஜாஜியின் கொள்ளுபேரன் புகழாரம்
ஆன்மிகத்தில் மூழ்கிய தத்துவஞானி நமது பிரதமர்: ராஜாஜியின் கொள்ளுபேரன் புகழாரம்
UPDATED : ஜன 17, 2024 02:28 PM
ADDED : ஜன 17, 2024 02:18 PM

சென்னை: ஆன்மிகத்தில் மூழ்கிய ஒரு தத்துவஞானியாக நமது பிரதமர் இருக்கிறார் என சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளு பேரனான சி.ஆர்.கேசவன் கூறியுள்ளார்.
வரும் 22ம் தேதி அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் இவ்விழாவில் அன்றைய தினம் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இந்த விழா தொடர்பாக ராஜாஜியின் கொள்ளு பேரனான சி.ஆர்.கேசவன் கூறியதாவது: ஜனவரி 22 அன்று, பாரதத்தின் நாகரீக மறுமலர்ச்சிக்கு அடையாளமாக, 550 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க காத்திருப்பு முடிவுக்கு வரஇருக்கிறது.
பிரதமர் மோடி பங்கேற்க உள்ள ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் இந்த நிகழ்வை நம் வாழ்நாளில் கண்டுகளிக்க நாம் அனைவரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஆன்மிகத்தில் மூழ்கிய ஒரு தத்துவஞானியாக நமது பிரதமர் இருக்கிறார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில், நம்பிக்கையின் வெற்றி.
இது சுமார் 550 ஆண்டுகளாக ராமரை தங்கள் இதயங்களில் சுமந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் தன்னலமற்ற தியாகம், போராட்டம் மற்றும் நெகிழ்ச்சிக்கான மரியாதை. இது நாட்டின் பாரம்பரியத்தின் உயர்ந்த விழுமியங்களை அடையாளப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

